புதுடில்லி: வங்க கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால், அந்தமான் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்தமான் தீவில் சிக்கிய, 800 பயணிகளை கடற்படை கப்பல்கள் மீட்டுள்ளன.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛ விசாகப்பட்டினத்திற்கு தெற்கே, தென்கிழக்கு பகுதியில், 1,260 கி.மீ., தூரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, அந்தமான் நிகோபார் தீவுகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்' என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து 41 கி.மீ.,தொலைவில் உள்ள ஹேவ்லாக் தீவில் சிக்கியுள்ள, 800 பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
English Summary:
Storm in the Bay of Bengal has become a symbol, the Andaman and Nicobar Islands has been heavy rain. As a result, trapped in Andaman island, about 800 passengers rescue naval ships.