புதுடெல்லி, பல்வேறு ஊழல்களால் சாதனை படைத்த காங்கிரசுக்கு பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் பரிதவித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்தார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தலைநகர் டெல்லியில் கூறியதாவது,
நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அவரது முடிவை காங்கிரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல்வேறு ஊழல்களில் சாதனை படைத்த காங்கிரசுக்கு மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பரிதவித்துள்ளது.
பிரதமர் மோடியை தினமும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த கால கட்டத்தில் கறுப்புப்பணத்தை ஒழிக்க எந்த ஒரு நடவடிக்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசு எடுக்கவில்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த போது 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல், நிலக்கரி படுகை ஒதுக்கீடு ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல் ,வி.வி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்கான அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பிரிட்டனின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தில் லஞ்ச ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடந்தன. ஊழல்களில் சாதனை படைத்த காங்கிரசுக்கு கறுப்பு பணத்தை ஒடுக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் தற்போதும் விவாதித்து வருகிறார்கள். இந்த ஊழல்களில் சாதனை படைத்த காங்கிரசுக்கு மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையில் மிகவும் பரிதவித்து இருப்பதில் ஆச்சரியமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழைய ரூ 500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இருப்பினும் அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 50 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். அதுவரை மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நான் செய்தது தவறு என அதன் பின்னரும் நீங்கள் கருதினால் நான் எந்த தண்டனையையும் ஏற்க தயார் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவருகிறார்.
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவை கறுப்புப்பணத்தை பதுக்கி இருப்பவர்கள்தான் எதிர்க்கிறார்கள்., சாதாரண மக்கள் தங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. அரசின் முடிவு மிகச்சரியானது என உறுதியுடன் உள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனையை ரொக்க பரிவர்த்தனைக்கு பதிலாக மின்னணு முறையிலான வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இளைஞர்கள் கறுப்புப்பணம், ஊழல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க தங்கள் வீடுகள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு மின்னணு பரிவர்த்தனை முறையை கற்றுத்தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary : If the action of Prime Minister to the Congress with a record of corruption shivering: Jaitley.If the record of the various scandals of the Congress, Prime Minister Finance Minister Arun Jaitley criticized the action as the shivering.
Finance Minister Arun Jaitley said in Delhi yesterday,
Black Money in the country, tax evasion, corruption, and to extirpate the old Rs 500, Rs 1000 notes that the Prime Minister declared void. If Congress could not tolerate his decision. A record of the various scandals shivering by the action of the central government to the Congress.