புதுடில்லி : டிசம்பர் 30ம் தேதிக்குப்பின் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச.,30 கடைசி:
கடந்த நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து அதனை வைத்திருப்பவர்கள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ள டிச.,30ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளில் டிபாசிட் செய்யாதவர்களிடம் அபராதம் விதிக்க வகைசெய்யும் அவசரச்சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.50,000 அபராதம்:
இதன்படி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அதிக அளவில் பழைய நோட்டுகளை வைத்திருந்தால் அவர்களிடம் உள்ள பணத்தை போல் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும். இவை இரண்டில் எது அதிகமான தொகையோ அது அபராதமாக விதிக்கப்படலாம். நாளை(டிச.,28) டில்லியில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.
English summary:
New Delhi, December 30, the date of the old 500, to holders of notes of Rs 1000, which provides for fines of Rs 50,000 from the government said it was considering issuing reports new rules.