லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் காங்.குடன் கூட்டணி சேர்ந்தால் 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் அம்மாநில சமாஜ்வாதி கட்சி முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அகிலேஷ் உள்ளார். அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் இம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பா.ஜ. 2014-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலில் 78-ல் 71 லோக்சபா தொகுதிகளை அள்ளியது போன்று, சட்டசபை தேர்தலிலும் பெருவாரியான சட்டசபை தொகுதிகளை அள்ள வெற்றி வியூகம் வகுத்து வருகிறது.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தினை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து பார்லி.யை குளிர்கால கூட்டத்தொடரை முடக்கி வருகின்றனர். இந்நிலையில் உ.பி. சட்டசபை தேர்தலில் காங். -சமாஜ்வதி கட்சிகள் கூட்டணி சேரவாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின.
300 தொகுதிகள்:
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று லக்னோவில் நடந்த சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் காங்.குடன் கூட்டணி உண்டா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் அகிலேஷ் கூறியது, அப்படி ஒரு கூட்டணி அமைந்து,, காங். கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேசிய தலைவரான முலாயம்சி்ங்கிற்கு தான் உண்டு. நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். கிரிமினல்கள்,, ரெளடிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளீர்களே என கேட்டதற்கு, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் அவதியுறுகின்றனர். அதுதான் இப்போதை பிரச்னை . நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது என்றார்.
காங். சேருமா?
உ.பி.யில் 27 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க காங். காத்திருக்கிறது. முன்னதாக காங். முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்து பிரசாரத்தை காங். துவக்கிவிட்ட நிலையில். ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங். எதிர்ப்பை சமாஜ்வாதியும் ஆதரிக்கிறது எ்ன்பதால் இந்த கூட்டணி அமைய நல்ல வாய்ப்பு என காங். மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாதி கட்சியுடன் காங். கூட்டணி சேருமா என்பது தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்கும் நேரத்தில் தெரியவரும்.
English Summary:
Lucknow: UP The 300 seats in the assembly elections kank alliance with Samajwadi Party chief Akhilesh said the state would get over.