சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி தொடர்புடைய 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த மணல் கான்டிராக்டரான சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது; நேற்று மாலை கைது செய்தது. உடனடியாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும், ஜன., 3 வரை காவலில் வைக்கப்பட்டனர்.
கைது:
இந்நிலையில், சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மேலும் 3 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், அவர்களை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. மூன்று பேரும் ஜாமின் கேட்டு சிபிஐ கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
முதல் வகுப்பு:
இந்நிலையில், சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.
English Summary:
Chennai: engaging in illegal money remittance, sand contractor arrested 3 people associated Shekhar Reddy CBI arrested. Put them in judicial custody till January 4 Court.