மறைந்த முதல்வர் ஜெ வின் குடும்ப நண்பரும், சிறு வயது தோழியுமான கீதா; ஜெ மரணத்தை ஒட்டி சில சர்ச்சைக்குரிய கேள்விகளை முன் வைத்து அதற்கு விடை காணும் பொருட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜனவரி 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெ மரணத்திற்கு நீதி கேட்டு முன்னரே நடிகை கெளதமி, அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அதிக அறிமுகமற்றவராக இருந்த போதும் அதிரடிக் கேள்விகளுடன் ஜெ மரணத்தை முன்னிறுத்தி கேள்விகள் எழுப்பி இருக்கும் இந்த கீதா யார்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் வலுப்பட்டிருக்கிறது.
61 வயதாகும் கீதா; இந்தியாவின் முதல் அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த மொட்டூரி சத்யநாராயணாவின் பேத்தி. இவரது தாயார் சரோஜினி தெலுங்குப் பட உலகில் பெண் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினராக இருந்தவர். திரையுலகில் இருந்ததனால் கீதா குடும்பத்தினருக்கு சந்தியா மற்றும் அவரது சகோதரிகள் அனைவருடனும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. மேலும் கீதாவின் சகோதரரும், மறைந்த முதல்வர் ஜெ வின் சகோதரர் ஜெயக்குமாரும் உடன் பயின்றவர்கள். இந்த நட்பினால் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கீதா, ஜெ வுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்திருக்கிறார் என அவரது பேட்டி கூறுகிறது.
தனியார் புலனாய்வு வார இதழின் இணையப் பக்கத்தில் வெளியான கீதா பேட்டி;
ஜெ மரணத்திற்காக தாம் நீதி கேட்பது அரசியல் ரீதியாக அல்ல; ஜெ தமக்கு முதல் முறை அறிமுகமாகும் போது; அவர் புகழ் பெற்ற நடிகையும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. நாங்கள் இருவரும் நடிகை சாவித்திரிக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்த மைதானத்தில் ஒன்றாக டென்னிஸ் ஆடுவோம். அப்போதிருந்தே ஜெ எனக்கு நல்ல தோழி. ஜெ யாருமற்றவர் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். அவருக்காக நீதி கேட்க தோழியான நான் இருக்கிறேன். தீபாவும், தீபக்கும் வேண்டுமானால் மிரட்டப் படலாம். ஆனால் என்னை யாரும் மிரட்ட முடியாது. எனக்கு அரசியல் ரீதியாக வலிமையான பின்புலம் இருக்கிறது என்கிறார் கீதா.
English summary:
Late CM Jain family friend and childhood friend, Geetha; Jail to the death in order to find the answer to some questions put before the Egmore court was adjourned to January 11 the hearing on a petition. That would strengthen the interest to know.