குஜராத் மாநிலம், மெஹ்சானாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, சஹாரா மற்றும் பிர்லா குழும நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றார் என்று குற்றச்சாட்டினார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி அவற்றை பாஜக நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது: மோடி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் 2013-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்களா?
தற்போது வளர்ச்சித் திட்டங்களில் இருந்தும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் இருந்தும் அரசின் கவனத்தைத் திசைதிருப்பவே, பிரதமர் மீது அடிப்படையற்ற, அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.
மத்தியில் இதற்கு முன் ஆட்சி செய்த மத்திய அரசுகள், ஏழை மக்களின் நலனுக்கு எதுவும் செய்யாமல் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வந்தன. ஆனால், ஏழை மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், தங்களிடம் இருந்து ஏழை மக்கள் விலகிச் செல்வதால் பதற்றமடைந்துள்ள சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் என்று கூறினார்.
English Summary:
Gujarat, Mehsana, Congress leader Rahul Gandhi on Wednesday, speaking at a public meeting,
Modi, the Gujarat chief minister was received bribes from the Sahara and the Birla group of companies that reported.