திருவனந்தபுரம்: 2017-ம் ஆண்டு மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
துவக்க விழா:
கேரளாவில் கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில், வை-பை வசதி துவக்க விழாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில பொதுத் துறை அமைச்சர் சுதாகரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுரேஷ் பிரபு பேசியதாவது: நடப்பு ஆண்டில் மட்டும் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி துவக்கப்பட்டுள்ளது. சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டில்(2017) மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Thiruvananthapuram : In the year 2017 more than 200 railway stations will be established in the Wi-Fi facility, said the Union minister Suresh Prabhu.