கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில், பெண் ஒருவரால் அடித்துக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர் உடலை தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா உதவியை கோரியுள்ளனர்.
தாக்குதல்:
அரியானா, சிர்சா மாவட்டத்தில் உள்ள ரானியா என்ற நகரை சேர்ந்தவர் ஹர்தீப் சிங் தியோல். இவர் பஞ்சாப், மாலோவுட் நகரில் பிடெக் முடித்த அவர், நியூசிலாந்து சென்று ஓட்டல் மேலாண்மை படிப்பு படித்தார். பின்னர் கிறிஸ்ட்சர்ச் நகரில், வேலைக்கான விசாவில், பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி, ஹர்தீப் சிங் என்பவரை 22 வயது இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஹர்தீப் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். சம்பவத்திற்கு காரணமான பெண் கைது செய்யப்பட்டார். அவர் கடுமையான தாக்கியதற்கான விபரம் இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்திய பெண்ணின் பெயர் பிரான்செஸ்கா கொராரியா போரெல் என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணை, ஹர்தீ்ப் சிங்கிற்கு கடந்த10, 15 நாட்களாக தெரியும் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
உதவி கோரல்:
ஹர்தீப் சிங் உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக, நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள நியூசிலாந்து தூதரகத்தை அவர்கள் அணுகியுள்ளனர். ஆனால், இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் ஹர்தீப் சிங் உடலை இந்தியா கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். இதற்காக உள்ளூர் பா.ஜ.,தலைவர்கள் மூலம் சுஷ்மாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
English Summary:
Christchurch, New Zealand, the beating to death of a woman in her family to bring home the body of the Indian Youth Affairs Minister Sushma aid claims.