புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் தொடர்பாக விரக்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பார்த்து பரிதாபப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி: ரூபாய் நோட்டு வாபஸ் என்பது மிகப்பெரிய முடிவு. இது பற்றி கணக்கிடுவதில், பெரிய பொருளாதார நிபுணர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும், 125 கோடி இந்திய மக்களும் பல இடர்பாடுகளுக்கு இடையேயும். இந்த திட்டத்தின் முக்கியத்துவம், இதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து வரவேற்றனர். ஆதரவு தெரிவித்தனர்.
விரக்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பார்த்து பரிதாபப்படுகிறேன். அரசியல் லாபத்திற்காக ரூபாய் நோட்டு வாபசை திட்டத்தை அறிவித்ததாக கூறும் அவர்கள், இந்த திட்டத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். வருத்தத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
காங்கிரஸ் குறி:
பார்லிமென்ட் சுமூகமாக நடத்த தன்னால் இயன்ற முயற்சியை அரசு செய்தது. பார்லிமென்டிலும் நான் பேச தயாராக இருந்தேன். ஆனால், உரிய விவாதம் நடத்த விடாமல், பார்லிமென்டை முடக்குவதிலேயே காங்கிரஸ் குறியாக இருந்தது.ஊழல் தொடர்பான எந்த பேச்சையும் அரசியலாக மாற்றுவது மிகப்பெரிய ஆபத்தானது. இது பல குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக அமைந்து விடும். இதற்காக அரசியலில் முறைகேட்டை நான் மன்னிக்கிறேன் என்பது அர்த்தமாகாது. நிர்வாக பேரழிவு என ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். கடந்த 45 வருடங்களாக, பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி அமைச்சர், பிரதமர் என பல பதவி வகித்த அவரது ஆட்சி காலத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர்.
வரவேற்பு:
அடிக்கடி தேர்தல் நடத்துவதால், அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், பொருளாதாரத்தை பாதிக்கிறது. இதனால், பல மாநிலங்களில் நிர்வாகம் சரியாக செயல்பட முடியவில்லை. இதனால், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் யோசனையை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
NEW DELHI: The rupee note of frustration in relation to the withdrawal plan, including the opposition parties in the Congress, Modi said that feeling worry watching.