சென்னை : வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள வர்தா புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று (டிசம்பர் 12) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் எனவும், இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதே போன்று நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
ரயில் சேவையில் மாற்றம் :
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு பதிலாக ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
English summary:
Chennai: Chennai varta due to the storm, including the districts of Kanchipuram in the schools and colleges declared a holiday today. If heavy rain has been a change in train services in Chennai.