புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.3,300 கோடி அளவுக்கு கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகள் 734 சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஹவாலா மோசடி, வரிஏய்ப்பு என 3,200 நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில், ரூ. 500 கோடி அளவுக்கு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.92 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.421 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. கடந்த 20ம் தேதி வரை, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.3,200 கோடி கறுப்பு பணம் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றன.
English summary:
NEW DELHI: After return bill, the income tax of Rs 3,300 crore black money recovered in the raid Income Tax department sources said.