நியூயார்க் : இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்த கொண்ட அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது:
சுமூக உறவு தேவை:
இந்தியா-பாக்., இடையே சுமூக உறவு வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐ.நா., பொதுச் செயலாளர் கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே, எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதை, கவலையுடன் உற்று நோக்குகிறார். இருநாடுகளும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வலியுறுத்திய அவர், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
New York : India-Pakistan talks on the issue should be addressed by the UN, Secretary General Ban Ki-moon urged.