புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து உள்ளது.
கேள்வி:
செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை தெரிவிக்கும்படி ரிசர்வ் வங்கியிடம், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், 'செல்லாத நோட்டு திட்டத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை, தகவல் உரிமை சட்டத்தின்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியாது' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மறுப்பு:
புதிய நோட்டுகளை சப்ளை செய்து முடிப்பதற்கான காலம் குறித்த மற்றொரு கேள்வி, தகவல் உரிமைச் சட்டப்படி, ஒரு தகவலாக வரையறுக்கப்படாததால், அதுபற்றி தெரிவிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து, முன்னாள் மத்திய தகவல் ஆணையர், சைலேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ''தகவல் உரிமை சட்டப்படி கேட்கும் கேள்விக்கு, ரிசர்வ் வங்கி போன்ற அரசு அமைப்பு பதில் தெரிவிக்காத பட்சத்தில், அந்த சட்டத்தில் உள்ள விதிவிலக்கு, சம்பந்தப்பட்ட கேள்விக்கு எந்த வகையில் பொருந்தும் என்பதை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
English summary:
NEW DELHI: Invalid reasons for the bill to be put into the project, the Reserve Bank has refused.