அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்ததை யொட்டி எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை அனுசரித்த கருப்பு தினத்தை கருப்புப் பண ஆதரவு தினம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமர்சித்தார்.
அதிக மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி வியாழக்கிழமையுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த தினத்தை கருப்பு தினம் என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தர்னாவில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சிகள் நடத்திய தர்னா போராட்டத்தை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை கருப்பு தினம் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டன.
அந்த தினம் கருப்பு தினம் அல்ல; கருப்புப் பணத்தை அவர்கள் ஆதரித்த தினம் என்றே கூறுவேன்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் தர்னாவில் ஈடுபட்டதன் மூலம், தேசப்பிதாவை அவர்கள் அவமதித்துள்ளனர்.
பல்வேறு அயல்நாடுகள் கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளன.
ஆனால், எதிர்க்கட்சிகள் கருப்பு தினம் என்று கூறி எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.
நாடாளுமன்ற அலுவல்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவது ஜனநாயக அவமதிப்பை பிரதிபலிக்கிறது என்றார் வெங்கய்ய நாயுடு.
English Summary : Is Black Day; Black money in support of the Day.The announcement came more than a month's worth of valid banknotes opposition Thursday to the end of the day is observed as Black Day, Union Minister Venkaiah Naidu criticized black money and support.
High value of Rs 500, Rs 1000 banknotes bills last month that annulled the Prime Minister Narendra Modi announced on 8. The announcement came on Thursday completed a month.
Opposition parties, including the Congress saying that the Day Black Day Mahatma Gandhi statue in Parliament House before, went on protest.