காலண்டரில் ஜெயலலிதா படம் அச்சிடுவதா, சசிகலா படத்தை அச்சிடுவதா என்ற குழப்பத்தில், புத்தாண்டுக்கு காலண்டர் வழங்குவதை, அ.தி.மு.க., நிர்வாகிகள் தவிர்த்து விட்டனர்.
கைப்பற்ற முயற்சி : ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற, சசிகலா தரப்பு, முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கட்சியில் முக்கிய பொறுப்பில்உள்ளவர்கள் பலரும் சசிகலாவுக்கு ஆதரவுதெரிவித்து வருகின்றனர். அதே சமயம், அடிமட்ட தொண்டர்கள், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், கட்சியை வழிநடத்த அழைப்பு விடுத்து வைக்கப்படும், முதல்வர், ஓ.பி.எஸ்., ஆதரவு பேனர்களும் சூட்டை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இன்று பொதுக்குழு கூடுகிறது. புத்தாண்டு பிறக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், காலண்டர் குழப்பத்தில் சிக்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், புத்தாண்டை வரவேற்று, ஜெ., படத்துடன் காலண்டர்களை அச்சிட்டு தொண்டர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் வழங்குவது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அம்மா படத்தை போடுவதா... சின்னம்மா படத்தை போடுவதா என்று நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவர்களை நம்பி, காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானத்தை இழந்து உள்ளனர்.
தவிர்த்தது ஏன்? : இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில், காலண்டர் மற்றும் டைரிகள் விற்பனை மந்தம் அடைந்து உள்ளது. இதனால், தொண்டர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றம்; மற்றொரு பக்கம் மகிழ்ச்சி யாக உள்ளது
இது குறித்து, நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., துவங்கியபோது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., படங்களுடன் காலண்டர் அச்சிட்டு வழங்கினோம். பின், ஜெ., படம் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றது. ஜெ., மறைவைத் தொடர்ந்து, சசிகலாவை பொதுச் செயலராக முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், யார் படத்திற்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் படத்தை அச்சிட்டாலும், கோஷ்டி பூசலில் சிக்கி, எங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், தவிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர் ஒருவர் கூறுகையில், 'இப்போதுள்ள நிர்வாகிகள், பதவிக்காக, மாறியுள்ளனர். இவர்களால் தப்பியது காலண்டர் என்பதில் மகிழ்ச்சி' என்றார்.
English Summary:
Her image on the calendar printing, image printing Shashikala unsure, presenting New Year calendar, Digg, executives avoided.