மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் காளைகள் தயாராகி வருகின்றன. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் தயாராகி வருகின்றன.
காளைகளுக்கு நீச்சல், நடைபயிற்சி, துள்ளுவது, கொம்புகளால் முட்டி தூக்குவது உள்ளிட்ட பயிற்சிகளை காளைகளின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். காளைகளின் உடலுக்கு உரமேற்றும் வகையில் கருப்பட்டி, புண்ணாக்கு, என தீவனங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமே.
இதனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறும் மாடுபிடி வீரர்களும் பயிற்சி பெறுவதாக கூறுகின்றனர். தென்மாவட்டங்களில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை தொடர்ந்து மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலமானது. உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் மத்திய, மாநில அரசுகள் தடையை விலக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
English summary:
Madurai: Pongal festival nears jallikattu held this year in the expectation that the Bulls are preparing. Pongal festival jallikattu conducted by the Supreme Court's ban has not been treated in the last 2 years. Jallikattu this year in anticipation of the ban jallikattu in Madurai avaniyapuram Bulls are preparing.