ஹோனோலுலு: ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அமெரிக்காவின் ஹவாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பியர்ல் துறைமுக தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
அதிரடி தாக்குதல்:
1941ம் ஆண்டு டிசம்பர் 7 ம் நாள் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள பியர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் நாட்டு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது. இதில் 2,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் அமெரிக்காவுக்கு சொந்தமான எட்டு போர்க் கப்பல்கள் முற்றிலும் சேதமாகின.
இதனால் கோபமடைந்த அமெரிக்கா 1945ம் ஆண்டு ஜப்பானில் உள்ள நகரங்களான ஹீரோசீமா நாகசாகி மீது அணு குண்டு வீசியது. இதில் பல்லாயிரக்கணக்கில் உயிர்ச் சேதமும் பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது.
ஒபாமா விஜயம்:
அமெரிக்காவால் ஜப்பான் நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜப்பான் சென்றார். அதற்கு நன்றி கூறும் விதமாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
ஜப்பான் பிரதமரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இன்று(27-12-16) அமெரிக்காவின் ஹோனோலுலுவில் நடக்கும் மாநாட்டில் சந்தித்த பின் இருவரும் பியர்ல் துறைமுகம் சென்று தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
English summary:
Honolulu: Japanese Prime Minister Shinzo Abe has been touring the United States to Hawaii. Pearl Harbor attack in December 1941 that the United States is to pay tribute to the victims.