சென்னை : முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்ததும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் மறைவு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்காக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முதல்வர் ஜெயலலிதா நமது நினைவுகளில் நீங்காத இடம்பெற்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஏழை, எளிய மக்கள் மேம்பாடு அடைய அரசியலை பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் சிறந்த தலைவர் ஒருவரை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
எளிய மக்களின் தலைவரான முதல்வர் ஜெயலலிதாவை இழந்துவிட்டோம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க ஒரு தலைவரை இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில், முதல்வரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary : Jayalalithaa Rector DIED: President - Prime Minister leaders mourned.Chief Minister Jayalalithaa on hearing news of the death, President Pranab Mukherjee said. He has expressed his condolence message, the Chief Minister was one of the influential leaders named the praise. Similarly, the Prime Minister issued a condolence message, Indian politics has created a huge void in the death of Chief Minister Jayalalithaa. Furthermore, he has said that the death of such distress. Chief Minister Jayalalithaa to extend his deepest condolences for the death of the Union Home Minister Rajnath Singh.Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, the condolence message issued by the Chief Minister, has said that she never forgot our memories. Chief Minister of West Bengal Chief Minister Mamata Banerjee said that the death caused great grief. In a condolence message issued by the All India Congress president Sonia Gandhi, the poor, simple people, said to have used politics to achieve development.