சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் தொற்று சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முதல்வர் சீக்கிரம் வீடு திரும்பி விடுவார் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்ட வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
பேருந்துகள் நிறுத்தம்
இந்த செய்தி மெல்ல தமிழகம் முழுவதும் பரவி ஒருவித பதற்றம் உருவாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று என்பதால் குறைவான பேருந்துகளே சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள் மூடல்
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் பரவியுள்ளதால் தலைநகரான சென்னையில் கூடுதல் பதற்றம் உருவாகியுள்ளது. இங்கு செயல்பட்டுவந்த அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன. இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
கடைகளுக்கு பூட்டு
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் குறைவான கடைகளே சென்னையில் திறக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளும் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலால் விரைவாக மூடப்பட்டன. சின்ன சின்ன கடைகள், ஒருசில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், தியாகராயர் நகரில் 11 மணி வரை திறந்திருக்கும் அனைத்து துணிக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.
பயணிகள் தயக்கம்
ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் தாங்களாகவே வெளியூர் செல்வதை தவிர்த்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் இன்று இரவு புறப்பட்டு நாளை காலை சென்னைக்கு திரும்ப ஆயத்தமான நிலையில், முதல்வரின் உடல் நிலைகுறித்த தகவலால் பயணத்தை நிறுத்தியுள்ளனர்.
English Summary : Jayalalithaa had a heart attack .Buses are running across the closure of petrol pumps.Tamil Nadu Chief Minister Jayalalithaa suffered by heart attack, there is tension in the state. Petrol pumps were shut down to avoid any risks. Buses run throttled. Tamil Nadu Chief Minister Jayalalithaa in Chennai over the last 2 months on the road Grimes admitted to the Apollo Hospital and is receiving treatment. He was given a lung infection following treatment. Apollo Hospital management announced that they had reached this stage, he is a perfect character.