புதுடில்லி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மனு :
உடல்நலக் குறைவு காரணமாக 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த என்.ஜி.ஓ., சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ விசாரணை தேவை :
அவர் தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து விபரங்களையும் அறிக்கையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary:
NEW DELHI: Tamil Nadu Chief Minister Jayalalithaa's death late in the Supreme Court to order a CBI probe into the mystery because it's in the public interest in connection with the case was filed.