புதுடெல்லி, தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்றும் வர்தா புயல் நிவாரணப்பணிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 573 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கவேண்டும் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தனது தலையாய கடமையாக கொண்டுள்ளது. வர்தா புயல் கடந்த 12-ம் தேதி சென்னை மற்றும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் வர்தா புயலின் சீற்றத்திற்கு ஆளாகின. அப்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இந்த புயல் பாதிப்புகளை தவிர்க்க மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் உயிரிழப்பு சேதம் குறைந்தது.
புயல் பாதிப்புக்கு பி
ன்னர் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூபாய் ஆயிரம் கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவரை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார்.
பிரதமருடன் முதல்வர் சந்திப்பு:
பின்னர், முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று மாலை டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார். பிறகு மாநிலத்தில் வர்தா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் அடங்கிய விரிவான மனுவை பிரதமரிடம் அளித்தார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.22 ஆயிரத்து 573 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூபாய் ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த வாரியமும், காவிரி நீர் ஒழுங்கு முறை கமிட்டியும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படவேண்டும். அத்தி கடவு - அவினாசி திடத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும். உத்தேசிக்கப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா 2016 மற்றும் தேசிய நீர் வரையறை பணி மசோதா 2016 ஆகியவற்றுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மீனவர்கள் உரிமை:
பாக். வளைகுடாவில் இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தாரை வார்த்த கச்சத்தீவினை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். மீன் வளத்தினை பெருக்க அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய சிறப்பு நிதி திட்டத்தை அனுமதிக்க வேண்டும்.
2014-ம் ஆண்டு ஆழ் கடல் மீன் பிடி விதிமுறையை தளர்த்துதல் மற்றும் அட்டவணை பழங்குடியின பட்டியலில் மீனவர்களை சேர்க்க வேண்டும். மாநிலங்கள் இடையே பிரத்யேக பசுமை எரி சக்தி பாதை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் கூடுதல் காற்றாலை மின்சாரம் வீணாக தடுப்பதை இந்த பிரத்யேக பாதை அமைக்கப்பட வேண்டும்.
14-வது நிதிக்குழு, நீதித்துறை உள்கட்டமைப்பை நவீனப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி காரிப் கல்யாண் செஸ் மற்றும் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் டெபாசிட் திட்டம் ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளை ஈடுகட்ட ரூ.2 ஆயிரம் கோடியை வருடாந்திர சிறப்பு நிதியாக அளிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி கருத்துரு மற்றும் மத்திய விற்பனை வரி இழப்பீட்டை உடனடியாக அளித்தல் ஆகியவற்றில் தமிழகத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவு தேர்வு கூடாது:
மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வினை நடத்துவதால் பெரும் இடர் ஏற்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உள்ளது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். அதேபோன்று கால் நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு முறையையும் ரத்து செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு சிலை:
பாராளுமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலையை அமைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் பேட்டி:
டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், புயல் நிவாரண பணிகளுக்கு ரூ. 22 ஆயிரத்து 573 கோடி கேட்டேன். உடனடியாக ரூ. 1000 கோடி தருமாறு கேட்டுக்கொண்டேன். மேலும், மறைந்த முதல்வருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.
English Summary:
New Delhi: Delhi Chief Minister opannir wealth into the capital yesterday, met Prime Minister Modi at his residence. The late Chief Minister Jayalalithaa that Bharat Ratna should be given Rs 22 thousand 573 crore for relief varta storm would have to compensate the petition presented to the Prime Minister. Parliament also set the bronze statue of the late Chief Minister Jayalalithaa, the first full portrait Panneerselvam said.