சென்னை, ஜெயலலிதாவின் மரணத்திற்கு நடிகர் விக்ரம் தனது ஆழ்ந்த இரங்கலை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மரணத்திற்கு பிரபலங்களும் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டுக்கு பயணமாகியிருந்த விக்ரம் ஒரு சில காரணங்களால் சென்னை திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், அவரால் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. தனது இயலாமையை வருத்தத்துடன் இரங்கல் செய்தியாக வெளியிட்டுள்ளார் விக்ரம். அதில் அவர் கூறும்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற பலகோடி ரசிகர்களின் கண்களுக்கு நட்சத்திரமாகவும் திகழ்ந்துள்ளார். அவரது ஆளுமை, உள் வலிமை என அனைத்தையும் தவறவிட்டோம். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கே பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Jayalalithaa's death by Vikram expressed his deepest condolences to the report.