தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். இதனால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் போயஸ் கார்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதி சடங்கு சம்பிராதயங்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary : Tamil Nadu Chief Minister Jayalalithaa in Chennai Apollo Hospital, died yesterday at 11.30. The state is mired in grief. His body is buried at 4.30 pm today.