கோவா : கோவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் கழன்று நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. விமானம் 360 டிகிரி சுழன்று நின்றது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் துபாயிலிருந்து கோவா வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், மும்பைக்கு கிளம்பியது, . விமானத்தில் 7 ஊழியர்கள் மற்றும் 154 பயணிகள் இருந்தனர். அப்போது விமானத்தின் சக்கரம் கழன்றதால் விமானம் நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. விமானம் 360 டிகிரி சுழன்று நின்றது. மீட்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதில், விமானத்தில் இருந்தவர்களில் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓடுபாதையில் இருந்து விமானம் விலகியதால், பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையம், நண்பகல் 12.30 மணி வரை மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய விமானப்படை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
English summary:
Goa: Goa Jet Airways departing from the airport, the plane crashed adrift off the wheel. The aircraft stopped 360-degree spin. In which 15 people were injured. Today at 5 am, the Jet Airways flight from Dubai to Goa, Mumbai has sparked