புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, அரசு பரிசீலித்து வருகிறது; இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு, தற்போது, அனைத்து பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது
English Summary:
NEW DELHI: The Supreme Court and increase the salaries of judges, the central government plans.