மதுரை - கச்சத் தீவு புனித அந்தோணியார் தேவாலய புதிய கட்டிட திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதிக்கக் கோரிய மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழர் தேசிய முன்னணியின் இளைஞரணிச் செயலர் முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது , “ராமேசுவரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத் தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவை, 1974-ல் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றாமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை
க்கு இந்தியா வழங்கியது.
கச்சத் தீவு தமிழகத்தின் ஒரு பகுதி. ராமநாதபுரம் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கடந்த 1905-ல் தமிழகத்தைச் சேர்ந்த சீனி குப்பன் பட்டனகட்டையார், அந்தோணி பிள்ளை ஆகியோர் கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயம் கட்டினர். அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 3 நாட்கள் அந்தோணியார் ஆலய விழா நடைபெறும். இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து மீனவர்களும், பக்தர் களும் பங்கேற்பது வழக்கம். கச்சத் தீவு ஒப்பந்தத்தில் அந்தோணியார் விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்கலாம், கச்சத் தீவில் தங்கலாம், மீன்பிடி நடவடிக்கை களில் ஈடுபடலாம் என கூறப் பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழர்கள் 111 ஆண்டுக்கு முன்பு கச்சத் தீவில் கட்டிய பழங்கால தேவாலயத்தை இடித்து, அங்கு புதிய ஆலயத்தை இலங்கை அரசு கட்டியுள்ளது. இந்த ஆலயத்தின் திறப்பு விழா டிச. 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழாவில் 3 படகுகளில் தமிழகத் தில் இருந்து 100 பக்தர்களை அனுமதிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பங்குத் தந்தை கடிதம் அனுப்பியுள்ளார். கச்சத் தீவு ஆலயத் திருவிழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், பி.கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
English Summary:
Kaccat Island, part of the state. Ramanathapuram was the king's realm. In 1905, the Tamil Nadu-based sugar kuppan pattanakattaiyar, Anthony Pillai kaccat temple on the island of St. Antony. Every year on the first 3 days of St. Antony's Church festival held in March. Fishermen from Tamil Nadu in the festival, devotees also regularly participate. Antony agreement kaccat Island fishermen participate in the ceremony, kaccat stay on the island, is to say to carry out fishing operations.