
மருத்துவமனையில்...
தி.மு.க., தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், " தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு திணறலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சு திணறலுக்காக ட்ரக்கோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பல தலைவர்கள் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் வருகை:

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் ராகுல் கூறியதாவது: தமிழக அரசியலில் மூத்த தலைவர், கருணாநிதியை நேரில் சந்தித்தேன். தமிழக மக்களின் தலைவர் கருணாநிதி. அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவரை நேரில் சந்தித்து உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தேன். அப்போது ஹலோ என்றேன். விரைவில் குணமடைந்து கருணாநிதி வீடு திரும்புவார். விரைவில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். கருணாநிதி குணமடைய வேண்டுமென்ற சோனியாவின் விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தேன் என்றார்.
English Summary:
Chennai: hospitalized DMK president M. Karunanidhi, said Rahul had met in person.