சென்னை : சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்.
தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டிசம்பர் 15-ம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலுக்காக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் (டிசம்பர் 21) வெளியிட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புவார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார். கருணாநிதி வீடு திரும்புவார் என்ற தகவலை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., கனிமொழியும் உறுதி செய்தார்.
English Summary:
Chennai: DMK president M. Karunanidhi in Chennai Kaveri who are receiving treatment at the hospital and returns home today.