புதுடில்லி : பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், பதன்கோட் பயங்கரவாத தாக்குதல் மட்டுமின்றி, காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளையும் ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பு தான் நடத்தி உள்ளது. பதன்கோட் தாக்குதலில் ஈடுபட்ட காசிப் ஜன், கடந்த ஆண்டு மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது பற்றி தனது பேஸ்புக் மூலம் தகவல் பறிமாறி உள்ளான்.
பதன்கோட் தாக்குதல் பின்னணியில் இருக்கும் ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பினர் தான் காஷ்மீர் குண்டுவெடிப்புக்களை நடத்தி உள்ளனர் என்பதற்கான தொழில்நுட்ப, எழுத்துபூர்வ, டிஜிட்டல், டிஎன்ஏ மாதிரி அல்லது கள விசாரணை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் உள்ளன என தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஷரத் குமார் தெரிவித்துள்ளார்.
English summary:
In the chargesheet filed by the National Investigation Agency, patankot terrorist attack, but also in many parts of Kashmir, Jaish-e-Mohammad's the organization is carrying out the blasts last year.