சென்னை: இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் தெற்கு அந்தமான் இடையே புதிய காற்றழுத்த தாழ்வு சுழற்சி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில் தாழ்வு நிலையாக மாறி, 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய சி்ன்னம்:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறியதாவது:
நேற்று உள்தமிழகத்தில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் விருதுநகரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலையம், சென்னை விமான நிலையத்தில்,7 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் தெற்கு அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு சுழற்சி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில்குறைந்த அழுத்த தாழ்வு நிலையாக மாறி, 48 மணி நேரத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இவ்வாறு ஸ்டெல்லா கூறினார்.
English Summary:
Chennai: Indonesia's Sumatra and South Andaman is brewing between the new Kasparov cycle. Next to which is the lower end of the 24-hour shifts, 48 hours is likely to become depressed zone, Chennai Meteorological Center said.