சென்னை - வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளதால், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு "வர்தா" என பெயரிடப்பட்டுள்ளது.
ஏமாற்றிய நாடா புயல் : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதித்து, கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தொடங்கிய போதிலும், போதுமான மழை பெய்யவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி வங்கக்கடலில் உருவான "நாடா" புயலும், எதிர்பார்த்த அளவுக்கு மழையை கொடுக்கவில்லை.
வர்தா புயல் மழையை தருமா ? இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. "வர்தா" என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே ஆயிரத்து 60 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல், தெற்கு ஆந்திர கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 12-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 10-ம் தேதி முதல் மீனவர்கள், ஆந்திர கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புயல் காரணமாக, கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில், 2-ம்ள எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai - which Kasparov zone in the Bay of Bengal, the cyclone by storm, Cuddalore, Nagapattinam, Tuticorin, Pamban, Puducherry ports, 2nd storm warning is loaded cage. For this storm, "varta" named.