சென்னை - புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களும், சாய்ந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகத்தை தொடங்கும் நடவடிக்கைகளில் மின்வாரிய தொழிலாளர்களும் ஈடுபட்டிருகின்றனர். கடுமையான நெருக்கடியிலும் அவர்கள் மேற்கொண்டு வரும் பணி பாராட்டத்தக்கதாகும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
, "சென்னையை 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய புயல் மிகவும் மோசமான பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. வார்தா புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுந்து வரும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், சேதங்களில் இருந்து மீள இன்னும் அதிக காலம் ஆகும்.
தமிழக அரசும், உள்ளாட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்புகளும் இம்முறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இது பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், பெரும்பாலான இடங்களில் 120 கி.மீ. வேகத்திலும், சில இடங்களில் 182 கி.மீ. வேகத்திலும் தாக்கிய புயலால் சென்னை மாநகரமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் சாலை, தொடர்வண்டி, விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முற்றிலுமாக முடங்கின. பெருநகர தொடர்வண்டி சேவை மட்டும் தான் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவியாக இருந்தது. சென்னையில் 4000-க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3500-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல பகுதிகளில் சரக்குப் பெட்டகங்கள் (கண்டெய்னர்கள்), மகிழுந்துகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே புயலின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.
புயலின் பாதிப்பு காரணமாக சென்னையில் பல பகுதிகளில் இன்னும் போக்குவரத்து சீரடையவில்லை. புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களும், சாய்ந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகத்தை தொடங்கும் நடவடிக்கைகளில் மின்வாரிய தொழிலாளர்களும் ஈடுபட்டிருகின்றனர். கடுமையான நெருக்கடியிலும் அவர்கள் மேற்கொண்டு வரும் பணி பாராட்டத்தக்கதாகும். இதற்காக அவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
English Summary : Leaning trees in storm removal work: Anbumani appreciation to Government of Tamil Nadu.Storm in the Chennai Corporation to remove the leaning trees, including field staff and restructure the electric power supply wiring and start to lean in the Electricity Board workers itupattirukinranar fallen. Who are doing their work parattattakkatakum serious crisis "Anbumani Ramadoss said that the PMK leader ilainaranit. In this connection, he said in a statement