இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இந்திய மொழி படங்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக இந்தி படங்களை அங்குள்ள மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். எனவே அங்கு அவை அதிக அளவில் வெளியாகின்றன.
இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் காஷ்மீர் எல்லையில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது யுரி ராணுவ முகாமில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த பயங்கர தாக்குதலில் 19 வீரர்கள் பலியானார்கள்.
இதனால் இந்திய ராணுவம் பதிலடி தந்தது. இந்திய ராணுவம் எல்லை கட்டுப்பாடு கோடு(எல்.ஓ.சி.) பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை கொன்று குவித்தது. அப்போதது 38 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.
இதனால் இரு நாடுகள் இடையே உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய சினிமா படங்களில் பாகிஸ்தானிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பயன்படுத்தக்கூடாது என இந்திய சினிமா பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அந்த படங்கள் நல்ல வசூலையும் பெற்றன. அங்கு இந்தி சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சினிமா வர்த்தகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்திய படங்களை திரையிட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று(திங்கள்) முதல் பாகிஸ்தானில் இந்தி சினிமா படங்கள் திரையிடப்படுகின்றன.
English Summary:
ISLAMABAD: Pakistan has removed the ban on Indian films.Indian language films are disclosed in Pakistan. Especially liked the people there, watching Hindi films. So there they are printed in large quantities