அகர்த்தலா: திரிபுரா சட்டசபையில் நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதில் சபாநாயகர் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் புகார்:
திரிபுரா வனத்துறை அமைச்சராக இருப்பவர் நரேஷ் ஜமாடியா. இவரும், அகர்த்தலா நகராட்சி கவுன்சிலர் ரின்மே சென் என்பவரும் சேர்ந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையில் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சபாநாயகர் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது என மாநில அரசு தெரிவித்தது.
எதிர்ப்பு:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதீப் ராய் பர்மான், சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை எடுத்துக்கொண்டு கோஷமிட்டவாறே சபையிலிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறினர். இதனால் சபையை ஒத்திவைத்தனர். இதன் பின்னர் சபை பாதுகாவலர்கள், ராய் பர்மனிடமிருந்த செங்கோலை வாங்கி, சபாநாயகர் இருக்கையில் வைத்தனர். சபாநாயகர் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்ததாக பர்மன் கூறினார்.
English summary:
Akarttala: Tripura There was chaos in the Assembly yesterday. Trinamool Congress MLA in which the rod is kept in the speaker's seat, and took away the outrag