புதுடெல்லி: மக்களவையில் பா.ஜ மூத்த தலைவர் அத்வானி தெரிவித்த வேதனையான கருத்தை வைத்து, காங்கிரஸ், பா.ஜ ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி இன்று முடிவடைகிறது. உயர் மதிப்பு கரன்சி தடை விவகாரம் தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஓட்டெடுப்பு இல்லாத விவாதம் நடத்த தயார் என ஆளும் கட்சி கூறிவந்தது.
இந்த முட்டுக்கட்டையால் குளிர்க்கால கூட்டத் தொடர் முழுவதும் வீணானது. வழக்கம்போல் அமளி காரணமாக மக்களவை நேற்றும் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முன்வரிசையில் சோகத்துடன் அமர்ந்திருந்த பா.ஜ மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், ஒவ்வொரு நாளும் அமளியால் அவை ஒத்திவைக்கப்படுகிறது. எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம்போல் உள்ளது என வேதனையுடன் கூறினார். அத்வானி வேதனையுடன் கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
உடனே அவர் அத்வானியிடம், பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராஜ்நாத் சிங்கிடம், கடைசி நாளன்றாவது கரன்சி தடை விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதை உறுதி செய்யும்படி சபாநாயகரிடம் சொல்லுங்கள் என கூறியுள்ளார். யாருக்கு வெற்றி, தோல்வி என பார்க்க கூடாது. ஏதாவது விதியின் கீழ் விவாதம் நடை பெறவேண்டும். அவ்வாறு விவாதம் இன்றி கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் குளிர்க்கால கூட்டத் தொடர் முழுவதும் வீணானதாக கருதப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி இத்ரிஸ் அலியிடம் கூறியுள்ளார்.
அத்வானியின் இந்த வேதனையான கருத்தை வைத்து காங்கிரஸ், பா.ஜ ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டியுள்ளன. அத்வானியின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்காதது எல்லோருக்கும் வருத்தம்தான். ஆனால், என்ன செய்வது. சிலர் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து யார் கோஷமிடுகின்றனர் என எல்லோருக்கும் தெரியும். அத்வானி மூத்த உறுப்பினர் என்பதால் அவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்’’ என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘‘ஜனநாயக உரிமைகளுக்காக உங்கள் கட்சிக்குள் போராடியதற்கு நன்றி அத்வானிஜி’’ என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பார் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘சொந்த கட்சியை அத்வானி கடுமையாக திட்டியுள்ளது தெளிவாக தெரிகிறது. இது காங்கிரசுக்கு எதிரான கோபம் என திரித்துக் கூறுவது கேலிக்கூத்தானது’’ என தெரிவித்துள்ளார்.
English Summary:
New Delhi: BJP leader LK Advani said in the Lok Sabha on the theme of anguish, the Congress and the BJP have been accusing each other of the parties.