முதுமலை: நீலகிரி மாவட்டம், முதுமலையில் பாரமரிக்கப்பட்டு வந்த, 9 வயது ஆண் யானை உயிரிழந்தது.திருவண்ணாமலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், கடந்த,2013ல் ஆறு காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கி வந்தன. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு, ஆகஸ்ட், 27ல் வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி அவற்றை பிடித்தனர்.
அதில், ஒரு பெண் யானை, இரண்டு ஆண் யானை குட்டிகள் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு வரப்பட்டு, 'பாம்பேக்ஸ்' யானைகள் முகாமில், கராலில் அடைக்கப்பட்டன. அவற்றுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இறப்பு:
பயிற்சிக்குப் பின், கராலிருந்து வெளியே எடுத்து, முகாம் யானைகளாக மாற்றப்பட்டன. பெண் யானைக்கு நர்மதா,26, என பெயரிட்டனர். அது, 2014 ஜூன் மாதம் குட்டி ஈன்றது; குறை பிரசவம் என்பதால், சில நாட்களில் குட்டி இறந்து விட்டது. பின்பு, நர்மதாவுக்கு யானை சவாரிக்கான பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் அதற்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்தது. இந்த சூழ்நிலையில், ‛பாரதி' என பெயரிடப்பட்ட, ஒன்பது வயது ஆண் யானையும் இன்று உயிரிழந்தது.
English summary:
Mudumalai Nilgiris district, who recovering in Mudumalai, 9-year-old male elephant was dead.