புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, காங்., துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அவர் காங்., கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.,விலிருந்து விலகல் :
பா.ஜ., முன்னாள் எம்.பி., நவ்ஜோத் சிங் சித்து, பா.ஜ., தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ஆவாஸ்-ஏ-பஞ்சாப் என்ற அமைப்பைத் துவக்கினார். சமீபத்தில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் காங்., கட்சியில் இணைந்தார். இதனையடுத்து சித்துவும், காங்., கட்சியில் இணையலாம் எனத் தகவல்கள் வெளியாகியது.
ராகுலுடன் சந்திப்பு :
இந்நிலையில், டில்லியில் காங்., துணைத் தலைவர் ராகுலை, சித்து சந்தித்து பேசினார். இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. இதில் நடந்த விவாதம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ராகுலுடனான இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
English Summary:
New Delhi : Former cricketer and BJP, former MP Navjot Singh Sidhu, Cong., Met with Vice President Rahul Gandhi. He subsequently Cong., To join the party, sources said.