சென்னை, ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று 4–வது நாளாக அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
‘‘எங்க அம்மா உலகத்துக்கே தாய்; அம்மா இல்லாமல் எங்களால் இருக்க முடியவில்லையே’’ என பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அடக்கம் செய்த இடத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. பெரிய ரோஜா மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சிவப்பு ரோஜா மலர்கள் தூவப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து குவிந்துள்ளனர். சாரி சாரியாக வந்தவண்ணம் இருந்தனர். அஞ்சலி செலுத்த நீண்ட ‘கியூ’வில் நின்றார்கள்.ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்ததும் ஆண்களும், பெண்களும் துக்கம், வேதனை தாங்காமல் கதறி அழுதனர்.அம்மா எங்களுடன் இருக்கிறார். அம்மா எங்கள் தெய்வம் என பெற்ற தாய் இறந்தபோது கூட நான் இப்படி வேதனைப்பட்டதில்லை அம்மா. நீங்க எவ்வளவோ செய்திருக்கிங்களே அம்மா.
நீங்கள் இல்லாமல் எங்களால் இருக்க முடியவில்லையே என்று கதறி அழுதனர்.
English Summary:
Chennai, Jayalalithaa yesterday on the 4th day of the memorial to pay tribute to the formerly bustling resort crowds.