புதுடெல்லி, பிரதமர் மோடி டெல்லியில் இருக்கும் போது பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்ததே கிடையாது. இந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் வரவிருக்கும் 3நாட்களும் பிரதமர் மோடி வருவார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது தொடர்பாக பிரதமர் மோடி பாரளுமன்றத்தில் விவாதம் செய்ய வர அஞ்சுகிறார் என எதிர் கட்சிகள் கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி துவங்கி இந்த மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த ஒரு மாதமாகவே இந்த கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடர் இந்த மாதம் 16ம் தேதி முடிவடைகிறது. அதாவது இன்னும் 3 நாட்களில் குளிர் கால கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
வெங்கய்யா பதிலடி
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று கூறுகையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்தால், பாராளுமன்ற கூட்டத்துக்கு வராமல் தவிர்ப்பது இல்லை. அவர் எல்லா நாட்களும் பாராளுமன்றத்திற்கு வருவார். அவையில் தேவைப்படும் நேரத்தில் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்த குளிர் கால கூட்டத்தொடர் இன்னும் 3 நாட்களில் முடிகிறது. இந்த கூட்டத்தொடர் முடியும் வரை பிரதமர் மோடி வருவார். அவர் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதத்தில் பங்கேற்க எந்த வித தயக்கமும் காட்டவில்லை. எதிர் கட்சிகள் தாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பிரதமர் மோடி பாராளுமன்ற அவைக்கு வர வேண்டும் என கோஷம் போடத்துவங்கியுள்ளனர். பழைய ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என்று பாராளுமன்ற சபா நாயகர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எதிர் கட்சிகள் எதற்காக கூச்சல் போட வேண்டும்?
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.
English Summary : Modi does not come to the parliament on the day itself, the opposition countered venkayya Naidu. While in Delhi, Modi has never been without a parliament. The winter session of Parliament, Prime Minister Modi will come in the coming 3 days.