நியூயார்க் : போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மோடி 9 வது இடத்தில் உள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த 74 மனிதர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 9 வது இடத்தில் உள்ளார். டாப் 10 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தொடர்ந்து 4 வது ஆண்டாக,முதல் இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளார். 2வது இடத்தில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
இந்த பட்டியலில் மோடி இடம்பெற்றிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள போர்ப்ஸ், இந்தியாவில் மிகப் பெரிய புகழ்மிக்கவராக மோடி உள்ளார். சமீப காலமாக மோடியின் உலக நாடுகள் பயணம் அவரை உலக தலைவர்களில் புகழ்பெற்றவராக உயர்த்தி உள்ளது. தட்பவெப்ப நிலை மாறுபாடு போன்று முக்கிய பிரச்னைகளில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை உலக மக்கள் பலரையும் கவர்ந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக அவர் பழைய ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது, அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா 48 வது இடத்தில் உள்ளார். ஜியோ சேவை அறிமுகத்தால் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 38 வது இடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நடெல்லா 51வது இடத்தில் உள்ளார்.
English summary;
New York: Forbes top 10 most powerful people in the world list published by the Institute, has hit the Indian Prime Minister Modi. Modi is in 9th place in the list.
The company has 74 people on Forbes list of the world's powerful. Indian Prime Minister Narendra Modi in the top 10 list is in 9th place.