புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக பார்லிமென்டில் பேச என்னை மோடி அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளார். பிரதமரின் ஊழலை வெளிப்படுத்தும் ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னிடம் உள்ள ஆதாரத்தை கண்டு பிரதமர் பயப்படுகிறார். நான் பேசினால் உண்மை வெளிப்படும் என அஞ்சுகிறார்.
அரசு விரும்பவில்லை:
பார்லிமென்டிற்கு வராமல் பிரதமர் புறக்கணிக்கிறார். பொதுக்கூட்டத்திற்கும், இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் செல்ல பிரதமருக்கு நேரம் உள்ளது. பார்லிமென்டிற்கு வரவும், விவாதத்தில் பங்கேற்கவும் நேரமில்லை. நாட்டிற்கும், மக்களுக்கும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.
பார்லிமென்டில் நான் பேச விரும்புகிறேன். ஆனால், பிரதமர் இதனை விரும்பவில்லை. பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை. விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் பதிலளிப்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதை அரசும், பிரதமரும் விரும்பவில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளையும் பேச அரசு அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.
English Summary:
NEW DELHI: Prime Minister on the issue of corruption has withdrawn bill is proof that he had said Rahul.