கவுகாத்தி(அசாம்), பழைய ரூ500, ரூ1000நோட்டுகள் செல்லாது . நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பை தடுக்கவே பிரதமர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உறுதியான முடிவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று பா.ஜ.க தொண்டர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று அறிவித்தார். நாட்டில் உள்ள கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி உதவியளித்தல் ஆகிய முறைகேடான நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்கவே பிரதமர் இந்த முடிவை எடுத்தார். இந்த முடிவால் மக்கள் சிரமப்பட்டாலும், பிரதமரின் உறுதியான முடிவை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ராணுவ ஜவான்கள் நாட்டை காக்க எல்லையில் உயிர் துறக்கிறார்கள். நாங்கள் நாட்டின் நலனுக்காக சில மணி நேரம் வங்கிகளில் காத்து இருக்கலாம் என்ற உறுதியான மனதுடன் மக்கள் உள்ளனர்.
மக்களின் உறுதியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம். பா.ஜ.கவின் சாதனைகளை கட்சி கொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அரசின் பணிகளால் ஏழைகள் பலன் அடைவது குறித்தும் பா.ஜ.க தொண்டர்கள் மக்களிடம் உடனடியாக எடுத்துக்கூற வேண்டும். ஏழை மக்களின் முன்னேற்றத்தையே பா.ஜ.க தனது கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி மக்களின் நலன்களை கருதியே முடிவுகளை எடுத்து வருவதுடன் திட்டங்களையும் அமல் படுத்தி வருகிறது.
அசாம் மாநிலத்திலும் , விவசாயிகள் நிலமை மேம்படாத பட்சத்தில் மாநிலத்தில் வளர்ச்சி என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும். தற்போது அசாமில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. மத்தியிலும் பா.ஜ.கவே ஆட்சி செய்கிறது. இது சாதகமான விஷயம் ஆகும். இதனால் அசாம் மாநிலம் மிக சிறந்த முன்னேற்ற பாதையில் செல்லும். அசாமில் 5ஆண்டுகளுக்கு மட்டும் பா.ஜ.க.இருக்கப்போவதாக கருதக்கூடாது. வரவிருக்கும் அடுத்த 25 ஆண்டுகளில் மக்களுக்கு பணியாற்ற போகிறோம் என்பதை மக்களிடம் உறுதிபடுத்த வேண்டும்.
மக்களை நேரிடையாக சென்று மத்திய, மாநில பா.ஜக அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெறும் பயன் குறித்தும் அவர்கள் விளக்க வேண்டும். இதன் மூலமே நமது அரசின் செயல்பாடுகளை மக்கள் முழுமையாக உணர்வார்கள்.
English Summary:
Guwahati (Assam), the old Rs 500 and Rs 1,000 notes invalid. Black money in the country, Prime Minister, the action taken to prevent tax evasion. They give great support to the people of his determination to ensure that the Union Home Minister Rajnath Singh said.
Guwahati Assam yesterday, Home Minister Rajnath Singh, BJP volunteers participated and spoke at the meeting