சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் நடந்த மாநகராட்சியில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பண கொள்கை அறிவித்த பின்னர் பா.ஜ., வுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
சண்டிகர் மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகள் 26. இவற்றுக்கு தேர்தல் நடந்தது. இதில் 22 இடங்களில் பா.ஜ., மற்றும் அகாலிதள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 4 வார்டுகளே கிடைத்துள்ளது. அங்கு வெற்றியை பா.ஜ., தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய மகாராஷ்ட்டிரா , குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ., அமோக வெற்றியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெற்றதற்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்டையே ஸ்தம்பிக்க வைக்கிறது. ராகுலும் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் கொள்கையால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், சண்டிகர் தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பணக்கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இது காட்டுவதாக, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English summary:
CHANDIGARH: Punjab at Chandigarh Municipal Corporation, BJP has won a landslide victory. After announcing the new monetary policy of the central government, BJP is considered a success.