புதுடெல்லி :
- நமது நாட்டில் 400-க்கும் மேற்பட்ட கட்சிகள், எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டதில்லை எனவும், கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே இக்கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கலாம் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை வெள்ளையாக்க ...? உலகிலேயே நமது நாட்டில்தான் ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். அவற்றில், 400-க்கும் மேற்பட்ட கட்சிகள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டதில்லை எனவும், இக்கட்சிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே தொடங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாகவும், அக்கட்சிகளின் நன்கொடைகளுக்கு அளிக்கப்படும் வருமான வரிவிலக்கை நீக்க வேண்டும் எனவும் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். தேர்தலில் பங்கேற்காத கட்சிகளின் பட்டியல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக அனுப்பும்படி, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.
English Summary:
In our country, more than 400 parties, as not nominated any election, the Chief Election Commissioner of India as black money to makes white money these parties have expressed their doubts.