சென்னை : ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
விண்ணப்பங்கள் வரவேற்பு:
2017-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ்குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சென்னை, எண். 13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2017-கான விண்ணப்பப் படிவங்களை 2-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்த விண்ணப்பங்களை என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
வழிமுறைகள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி மாதம் 24-ம்தேதியாகும். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 24-ம்தேதி அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி செல்லக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். குறியீடு உடைய வங்கியிலுள்ளதங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்க வேண்டும். ஹஜ் 2017 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2017-ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.haj committee.gov.in பார்வையிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 24-தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Hajj pilgrims and Muslims, their applications should be filed by the 24th day the government announced.