புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மறுப்பு தெரிவித்தன. மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். டில்லியில் ராகுல், மம்தா மற்றும் சில கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு ராகுல், மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
பதில் சொல்லுங்க:
ராகுல் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் தோல்வியடைந்து விட்டது. 50 நாள் அவுகாசம் முடிய 3 நாள் உள்ள நிலையில் நிலைமை சரியாகவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த உண்மையான விபரத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
ராஜினாமா செய்வாரா?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மாயாவதி, முலாயம், சோனியா மீது குற்றம்சாட்டுவதில் தான் பிரதமர் குறியாக உள்ளார். குற்றச்சாட்டு தொடர்பாக பதில் சொல்வதில்லை. 50 நாளுக்கு பிறகும் பிரச்னை தொடர்ந்தால், பிரதமர் ராஜினாமா செய்வாரா? கடந்த 50 நாட்களி்ல 20 வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளோம். ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் ஏழை மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.
இயலாத காரியம்:
தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள், விவசாயிகள் , தொழிலாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணம் இன்றி தவிக்கின்றனர். ஏ.டிஎம்.,மில் இன்று வரை காத்து கொண்டுள்ளனர். 50 நாட்கள் முடிய உள்ள நிலையில் எந்த பிரச்னையும் முடிவுக்கு வரவில்லை. டிஜிட்டல் மயத்திற்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை. மின்னணு பரிவர்த்தனை இயலாத காரியம் என்றார்.
English Summary:
NEW DELHI: Prime Minister to answer in relation to the withdrawal bill, said Rahul.
In announcing the withdrawal of the federal government against the proposed bill in the Delhi Congress meeting today organized by the opposition. Left to participate in this meeting, the United Janata Dal parties refused. Mamata Banerjee was present. In Delhi, Rahul Banerjee and discussed some of the party leaders. The meeting, Rahul Banerjee met with journalists