சென்னை: வங்கக் கடலில் உருவான 'நாடா' புயல் வலுவிழந்துள்ள நிலையில், நாளை அதிகாலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'நாடா' புயல் 6 மணி நேரத்தில் மணிக்கு 28 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள 'நாடா' புயல் வலுவிழந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.
சென்னையைப் பொளுத்தவரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
English Summary : Nada storm weakened: border crossing tomorrow morning.Made in the Bay of Bengal 'Nada' storm weakens, the Pondicherry tomorrow morning - that outweighs Vedaranyam coast between Cuddalore near Chennai Meteorological Center said.
This morning, speaking to reporters in Chennai Chennai Meteorological Department director Balachandran, located in the southwest Bay of Bengal 'Nada' Storm at 6 hours, 28 km The State is moving towards speed.