இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக நவீத் முக்தார் என்பவரை ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா நியமித்துள்ளார்.
புதிய தலைவர் நியமனம்
பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய தளபதியாக குவாமர் ஜாவெத் பாஜ்வா சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார். இவர் பதவி ஏற்றதில் இருந்து ராணுவத்துறை பணியிடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வகையில், பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக நவீத் முக்தார் என்பவரை குவாமர் ஜாவெத் பாஜ்வா நியமித்துள்ளார்.
ரிஸ்வான் அக்தர் நீக்கம்
இவருக்கு முன்னதாக இந்த பதவியை வகித்துவந்த லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர், சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்தார். பாகிஸ்தான் மண்ணில் உள்ள தீவிரவாதிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் உலகநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என பிரதமர் நவாஸ் ஷெரிப் தன்னிடம் கூறியதாக ரிஸ்வான் அக்தர் தெரிவித்திருந்தார்.
போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவர்
உளவுத்துறை ரகசியத்தை ஊடகத்துக்கு தெரிவித்ததால் ரிஸ்வான் அக்தரின் பதவி பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில், அவரை அந்நாட்டின் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமித்து பாஜ்வா உத்தரவிட்டுள்ளார். தற்போது, புதிய ஐ.எஸ். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவீத் முக்தார், குவெட்டாவில் உள்ள ராணுவ கல்லூரியில் பயின்று, பின்னர் அமெரிக்காவில் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாமாபாத் நகரில் தீவிரவாத தடுப்பு உளவுத்துறை அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Naveed Mukhtar, intelligence chief appointed as Pakistan: Army Staff Activity.
ISLAMABAD - Pakistan's intelligence service, the PCs. Naveed Mukhtar as the new president of the organization, a military commander appointed pajva kuvamar Javed.