அவிநாசி: அவிநாசி அருகே ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சோதனை:
கோவையை சேர்ந்த 3 பேர் காரிலும், 2 பேர் இரு சக்கர வாகனத்திலும் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை அருகே, நள்ளிரவு 12.15 மணியளவில் போலீசார் வாகன சோதனையின் போது அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனையடுத்து காரை சோதனை நடத்தினர். காரில் 2 பண்டல்களில் புதுப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மதிப்பு ரூ.35 லட்சத்திற்கும், ரூ.100 நோட்டுகள் மதிப்பு ரூ. 1லட்சத்திற்கும் இருந்தது தெரியவந்தது.
விசாரணை:
இதனையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், வாகனங்களில் வந்தவர்கள் கோவையை சேர்ந்த இளையராஜா, ஷாகுல் ஹமீத், அசாருதீன், குல்பர் அலி, ஹாரூன் என தெரியவந்தது. பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
English Summary:
Tirupur: Tirupur near Rs 35 lakh was seized. This trial is ongoing in relation to 5 people.